பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டல்கள் நேரத்தை நீட்டிக்க கோரிக்கை

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:ஓட்டல்கள் செயல்படும் நேரத்தை, இரவு, 10:00 மணி வரை நீட்டிக்குமாறு, ஓட்டல்கள் சங்கத்தினர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழக ஓட்டல்கள் சங்க தலைவர், எம்.வெங்கடசுப்பு கூறியதாவது:ஓட்டல்களில், காலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை, வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடவும்; 'பார்சல்' சேவைக்கு, இரவு, 9:00 மணி வரையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து ஓட்டல்களும், முழுவதுமாக செயல்பட துவங்கியுள்ளன.சைவ ஓட்டல்களில், 60 சதவீதமும்; அசைவ ஓட்டல்களில், 70 சதவீதமும் வியாபாரம் நடக்கின்றன. எனவே, ஓட்டல்கள் செயல்படும் நேரத்தை, இரவு, 10:00 மணி வரை நீட்டிக்க, அரசு அனுமதி வழங்க வேண்டும்.

ஊரடங்கால், ஓட்டல் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடனை, திரும்ப செலுத்துவதற்கான அவகாசத்தை, மத்திய அரசு, ஓராண்டு நீட்டிக்க வேண்டும். அந்த காலத்தில், வட்டிக்கு வட்டி வசூலிக்க கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X