மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு

Added : செப் 16, 2020
Share

''உடலில் சர்க்கரை அளவு கட்டுப்பாடுடன் இருந்தால், மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்வு அமையும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்,'' என்கிறார் துடியலுார் கே.கே.டயாபடீஸ் மருத்துவ மையம் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் துரைசாமி.சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில், கணையத்தின் பங்கு என்ன?நீரிழிவு என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, சராசரியை விட அதிகமாகி இருப்பது. கணையத்தில் பீட்டா செல்கள் சுரக்கும் அளவு குறைவதால், இது ஏற்படுகிறது. இந்த பீட்டா செல்தான், சர்க்கரையை கட்டுப்படுத்தும் இன்சுலினை உருவாக்குகிறது.சர்க்கரை நோயாளிகளின் ஆபத்தான நிலை என்று எதைக் குறிப்பிடலாம்?உடல் பருமன், நீரிழிவு நோய், இருதய நோய் இவை மூன்றும், ஒரு மனிதனுக்கு இருப்பது மிக அபாயமானது. இவர்கள் உடனடியாக, சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம்.நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, மணவாழ்வில் பிரச்னை ஏற்படுமா?கண்டிப்பாக ஏற்பட வாய்ப்பு உண்டு. சர்க்கரை நோய் அனைத்து ரத்தக்குழாய்களையும் பாதிக்கும். இருதயம், மூளை, கிட்னி, கண்கள், கால் எரிச்சல் போன்ற பிரச்னைகளுடன் தாம்பத்திய பிரச்னையையும் உருவாக்கும்.சர்க்கரை நோயால் ஏற்படும் தாம்பத்ய குறைபாடு ஆண், பெண் இருவரையும் பாதிக்குமா?சர்க்கரை நோய் உள்ள ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கும். இருவருக்கும் தாம்பத்தியத்தில் நாட்டமின்மை ஏற்படலாம்.தாம்பத்திய குறைபாடு, இருதய நோய் இரண்டுக்கும் தொடர்பு உண்டா?இவை இரண்டும் ரத்தக்குழாய் தொடர்பானவை. தாம்பத்தியத்தில் நாட்டமின்மை ஏற்பட்ட சில ஆண்டுகளுக்கு பின், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வைக்க, பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை என்ன? சரியான நேரத்தில் சமச்சீரான உணவு, உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி, உறக்கம், மருத்துவ பரிசோதனை, மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை சரியான நேரத்தில் உண்பது, மன நிம்மதியுடன் இருப்பது, புகைப்பழக்கம், மது ஆகியவற்றை தவிர்த்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றினால், சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X