வீடுகளுக்கு வரி விதிக்க பொதுமக்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளுக்கு வரி விதிக்க பொதுமக்கள் கோரிக்கை

Added : செப் 16, 2020
Share

கோட்டூர்:கோட்டூர் அடுத்த பொங்காளியூரில், வீட்டு வரி எண் வழங்கி, அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தி, மக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில், பொங்காளியூர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொங்காளியூர் மதுரை வீரன் கோவில் வீதியில், 50 ஆண்டுகளாக, வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு, மார்ச், 2019ல் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால், இதுவரை பேரூராட்சி சார்பில், வீட்டு வரி எண் வழங்கி, வீடுகளுக்கு வரி விதிக்கவில்லை.மேலும், குடியிருப்பு பகுதியில் கழிப்பிடம், ரோடு, குடிநீர் குழாய், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதுவரை பலமுறை மனு கொடுத்தும் தீர்வில்லை. அடிப்படை வசதிகள் மேம்படுத்தி, வீடுகளுக்கு வரி விதிப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X