கோவை:அமாவாசை, புரட்டாசி சனி மற்றும் பிரதோஷம் ஆகிய முக்கிய நிகழ்வுகள் அடுத்தடுத்து வருவதால், வழிபாடு மற்றும் சடங்குகளுக்காக பொதுமக்கள், கோவில் மற்றும் கோவில் ஒட்டிய ஆற்று பகுதிகளில் கூடுவதை, கட்டாயம் தவிர்க்கவேண்டும் என கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கை:வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ள வேண்டிய, கட்டுப்பாடு நடைமுறைகளை அரசு வகுத்துள்ளது. கோவில்களில் கூட்டத்தை தவிர்த்து, நிச்சயம் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும்.மஹாளய அமாவாசை, புரட்டாசி சனி மற்றும் பிரதோஷம், ஆகிய முக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து வருவதால், வழிபாடு மற்றும் தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளுக்காக, கோவில்களை ஒட்டிய ஆற்று பகுதிகளில் கூடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.முக்கிய கோவில்களின் அருகேயுள்ள மண்டபங்களை சடங்கு மற்றும் பிற பயன்பாட்டுக்கு வாடகைக்கு விட, உரிமையாளர்கள் சம்மந்தப்பட்ட துறையிடம் இருந்து, முன்அனுமதி பெறவேண்டும்.உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து, இந்துசமய அறநிலையத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களால் கண்காணிக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE