சென்னையில் 1.50 லட்சத்தை கடந்தது தொற்று பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 1.50 லட்சத்தை கடந்தது தொற்று பாதிப்பு

Added : செப் 16, 2020
Share
சென்னை:சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.50 லட்சத்தை கடந்துள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 170 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 80 ஆயிரத்து, 623 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன. அதில், 5,697 பேருக்கு தொற்று உறுதியானது. அதில், சென்னையில், 989; கோவையில், 485; செங்கல்பட்டில், 324; சேலத்தில், 292; திருவள்ளூரில், 283;

சென்னை:சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.50 லட்சத்தை கடந்துள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மாநிலத்தில் உள்ள, 170 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 80 ஆயிரத்து, 623 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன. அதில், 5,697 பேருக்கு தொற்று உறுதியானது. அதில், சென்னையில், 989; கோவையில், 485; செங்கல்பட்டில், 324; சேலத்தில், 292; திருவள்ளூரில், 283; கடலுாரில், 268; திருப்பூரில், 262 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மார்ச் முதல் நேற்று வரை, 60.48 லட்சம் மாதிரிகளை பரிசோதித்ததில், ஐந்து லட்சத்து, 14 ஆயிரத்து, 208 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதில், சென்னையில் மட்டும், ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து, 572 பேர் பாதிக்கப்பட்டு, மாநிலத்தில் தொற்று பாதித்த மாவட்டங்களில், முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில், 31 ஆயிரத்து, 67; திருவள்ளூரில், 28 ஆயிரத்து, 903; கோவையில், 23 ஆயிரத்து, 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோவையில், ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இருந்து, தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில், நேற்று மட்டும், 5,735 பேர் வீடு திரும்பியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, நான்கு லட்சத்து, 58 ஆயிரத்து, 900 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது, 46 ஆயிரத்து, 806 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், 68 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களுடன் சேர்த்து, தமிழகம் முழுவதும், இதுவரை, 8,502 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்பு

அரியலுார் 3,315 3,112 37

செங்கல்பட்டு 31,067 28,457 491

சென்னை 1,50,572 1,37,685 3,004

கோவை 23,147 19,193 361

கடலுார் 16,835 14,093 184

தர்மபுரி 2,204 1,368 20

திண்டுக்கல் 8,001 7,174 151

ஈரோடு 4,803 3,694 63

கள்ளக்குறிச்சி 8,146 7,042 90

காஞ்சிபுரம் 19,768 18,170 288

கன்னியாகுமரி 11,197 10,173 210

கரூர் 2,281 1,806 33

கிருஷ்ணகிரி 3,327 2,456 45

மதுரை 15,477 14,371 374

நாகை 4,312 3,087 70

நாமக்கல் 3,559 2,628 52

நீலகிரி 2,528 1,934 17

பெரம்பலுார் 1,581 1,456 19

புதுக்கோட்டை 7,588 6,675 122

ராமநாதபுரம் 5,233 4,849 114

ராணிப்பேட்டை 12,287 11,505 145

சேலம் 15,066 12,664 240

சிவகங்கை 4,585 4,238 114

தென்காசி 6,400 5,664 121

தஞ்சாவூர் 8,626 7,497 132

தேனி 13,914 13,014 160

திருப்பத்துார் 3,857 3,220 76

திருவள்ளூர் 28,903 26,360 490

திருவண்ணாமலை 13,485 11,827 197

திருவாரூர் 5,538 4,702 65

துாத்துக்குடி 12,458 11,620 119

திருநெல்வேலி 11,309 10,053 191

திருப்பூர் 5,200 3,321 87

திருச்சி 9,017 8,014 132

வேலுார் 12,899 11,626 197

விழுப்புரம் 9,705 8,779 85

விருதுநகர் 13,767 13,162 205

வெளிநாட்டில் இருந்து வந்தோர் 924 918 1

உள்நாட்டு விமான பயணியர் 899 867 0

ரயிலில் பயணியர் 428 426 0

மொத்தம் 5,14,208 4,58,900 8,502

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X