கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேர்வுக்கான செலவு விபரங்கள் அண்ணா பல்கலைக்கு உத்தரவு

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:தேர்வுக்கான செலவு விபரங்களை முழுமையாக தாக்கல் செய்யும்படி, அண்ணா பல்கலைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஹரிகரன் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் காரணமாக, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய, அரசு உத்தரவிட்டது. நடத்தப்படாத தேர்வுகளுக்கு, மாணவர்களிடம் இருந்து கட்டணம் செலுத்தும்படி, அண்ணா பல்கலை கோரியது.

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளால், கட்டணமாக, 100 கோடி ரூபாய் கிடைக்கும். தேர்வு கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே, 'பாஸ்' அறிவிப்பு வந்தது.கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு, தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்தாமல், தேர்வு முடிவை அறிவிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோன்று, சவுந்தர்யா என்ற மாணவியும், மனு தாக்கல் செய்தார்.

மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தன. தேர்வு கட்டணம் செலுத்தா விட்டாலும், மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடும்படி, நீதிபதி உத்தரவிட்டார். தேர்வுக்காக செலவிடப்பட்ட விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அண்ணா பல்கலை தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், ''மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன. தேர்வு கட்டணமாக, 118 கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டிருந்தது; 141 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இன்னும் மறுமதிப்பீடு மற்றும் மதிப்பெண் சான்று வழங்கும் பணி உள்ளது,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ''அண்ணா பல்கலை தாக்கல் செய்த மனுவில், முழுமையான செலவு விபரங்கள் இல்லை. மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தை, பல்கலைக்கு கல்லுாரி செலுத்தவில்லை என்றால், அதை மாணவர்களுக்கு திருப்பி கொடுக்க உத்தரவிட்டிருக்க வேண்டும்,'' என்றார்.

தேர்வு நடைமுறைக்கான செலவுகளை முழுமையாக குறிப்பிட்டு, மனு தாக்கல் செய்ய, அண்ணா பல்கலைக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். விசாரணையை, வரும், 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X