கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெற்றோர் புகார் அளித்தால் 6 வாரங்களில் நடவடிக்கை

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:வாரிசுகளுக்கு எதிராக பெற்றோர் புகார் அளித்தால், ஆறு வாரங்களில் நடவடிக்கை எடுக்கும்படி, அரசு அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தாக்கல் செய்த மனு:பெற்றோர் பராமரிப்பு சட்டத்தை, 2007ல், மத்திய அரசு இயற்றியது. சட்டத்தை அமல்படுத்தும் விதமாக, தமிழக அரசு விதிகளை வகுத்தது. ஆனால், கண்டிப்புடன் சட்டத்தை அமல்படுத்தவில்லை.

வாரிசுகளால் கவனிக்கப்படாத பெற்றோரிடம் இருந்து புகார்களை பெற்று, நடவடிக்கை எடுக்க, வருவாய் அதிகாரிக்கு, சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. எனவே, சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. பெற்றோரை பராமரிக்காத வாரிசுகளுக்கு எதிராக புகார் அளித்தால், ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி, வருவாய் கோட்ட அதிகாரிக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X