சுயஉதவிக்குழு கட்டடம் பயன்பாடின்றி வீணாகுது

Added : செப் 16, 2020
Share
Advertisement
 சுயஉதவிக்குழு கட்டடம் பயன்பாடின்றி வீணாகுது

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள, கொண்டம்பட்டி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் பயன்பாடு இன்றி, பூட்டி வைக்கப்பட்டுள்ளது.கொண்டம்பட்டி ஊராட்சியில், கடந்த, 2003-04ம் ஆண்டு சம்பூர்ணா கிராம வளர்ச்சி திட்டத்தில், சுய உதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டது. இதில், மகளிர் குழுவினர் உதவி தொகைகள் பெற்று, சுய தொழில்களை செய்து வந்தனர்.சுய உதவிக்குழுக்களுக்கு சரிவர உதவிக்தொகைகள் கிடைக்காததால், தொழில்கள் செய்வது நிறுத்தப்பட்டது. கட்டடத்தை தொடர்ந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டடம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளதால், புதர்மண்டி வருகிறது. கட்டடம் விரைவில் பழுதடைந்துவிடும் சூழ்நிலை உள்ளது.இதனை தவிர்க்க, கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, கொண்டம்பட்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X