பொள்ளாச்சி:ரசாயனமில்லாமல் இயற்கை முறையில் அங்கக வேளாண்மை செய்வது குறித்து, கோவை வேளாண் பல்கலை கழகத்தில் 'ஆன்லைன்' வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.வேளாண்மையில் ரசாயன பயன்பாட்டால் மண் வளம் கெடுவதுடன், விளைபொருட்களில் ரசாயன கலப்பு ஏற்படுவது குறித்து பொதுவான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.இதனால், ரசாயனமில்லாமல் இயற்கை முறையில் விளைவித்த விளை பொருட்களுக்கு என தனி சந்தை உருவாகியுள்ளது. இந்த அங்கக விவசாயத்தில், இளம் விவசாயிகள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.அவர்களுக்கு வழிகாட்டும் வகையில், கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் வரும், 29ம் தேதி 'ஆன்லைன்' வாயிலாக அங்கக வேளாண்மை குறித்த சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது.பல்கலைக்கழகத்தின் வளம் குன்றா அங்கக வேளாண்மை துறை ஏற்பாடு செய்துள்ள இந்த பயிற்சி, கீழக்கண்ட தலைப்புகளில் நடத்தப்பட உள்ளது.இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை, இயற்கை முறையில் களை மேலாண்மை, இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் உறுதியளிப்புத்திட்டம் ஆகிய தலைப்புகளில் பயிற்சி நடக்கிறது.பயிற்சியில் கலந்து கொள்ள, 590 ரூபாயை வங்கிக்கணக்கில் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வளம் குன்றா அங்கக வேளாண்மைத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை என்ற முகவரியிலும், 0422- 6611206/ 2455055/ 9443778628 என்ற எண்களிலும், organic@tnau.ac.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE