பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து அதிகரிப்பால் விலை குறைவு இயற்கை உணவுக்கு மாறும் மக்கள்

Added : செப் 16, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதியில், உழவர் சந்தையில் கீரை வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைவுடன் விற்பனையாகிறது.உடுமலை, சுற்றுப்பகுதியில், விவசாயம் பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில், காய்கறி விளைச்சலுக்கு நிகராக கீரை வகைகளும் விளைவிக்கப்படுகிறது.கிழுவன்காட்டூர், சாலரப்பட்டி, ஆண்டியகவுண்டனுார், மொடக்குப்பட்டி, ஆலாம்பாளையம், என பல பகுதிகளில் கீரை விளைவிகக்கின்றனர். பொள்ளாச்சி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளிலிருந்தும், உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு வந்து கீரைகளை மொத்தமாக எடுத்துச்செல்கின்றனர்.அரைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, முடக்கத்தான், வெந்தயக்கீரை என பதினைந்துக்கும் மேற்பட்ட கீரை வகைகள் இங்கு விளைவிக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவமழை குறைவினால், ஜூன், ஜூலை மாதங்களில் கீரை வரத்து குறைந்திருந்தது.தற்போது, மீண்டும் உழவர் சந்தைக்கு, இப்போது இரண்டாயிரம் கட்டுகளுக்கும் அதிகமாக வரத்து உள்ளது. இதனால், கீரையின் விலையும் குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்செல்கின்றனர்.கொரோனா அச்சத்தால், மீண்டும் பழைய உணவு முறைக்கு திரும்புவதில், மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இயற்கை உணவு பட்டியலில், முதன்மையாகவும் முக்கியத்துவமும் பெற்றிருப்பது கீரை வகைகள் தான். இதனால் கீரை பிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X