பொது செய்தி

தமிழ்நாடு

சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு : பாசனம் துவங்கியதும் கிடைக்காமல் தவிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

உடுமலை:தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், தேவையான உரங்களை இருப்பு வைக்க வேண்டும் என பி.ஏ.பி., அமராவதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., மற்றும் அமராவதி அணை பாசனத்திட்டத்தின் கீழ், நடப்பு சீசனில், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.நெல், கரும்பு, மக்காச்சோளம், வாழை, சின்னவெங்காயம் உட்பட காய்கறி சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், விவசாய சாகுபடியில், பல்வேறு பலன்களை அளிக்கும், டி.ஏ.பி., உட்பட உரங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், விலைக்கு கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.நடவுக்கு முன்னர் அடியுரமாக இடப்படும் டி.ஏ.பி., பயிரின் வளர்ச்சித்தருணத்தில், பயன்படுத்தப்படும் உரங்களை குறித்த நேரத்தில், பயன்படுத்தாவிட்டால், விளைச்சல் வெகுவாக குறையும் அபாயம் உள்ளது.விவசாயிகள் கூறியதாவது: பருவமழைக்குப்பிறகு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தற்போதைய சீசனில், பல வகையான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.போதிய விளைச்சல் பெற, அதிகம் பயன்படுத்தப்படும் டி.ஏ.பி., உரம் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் இருப்பு இருப்பதில்லை. இதனால், தனியார் உர விற்பனையாளர்களிடம் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனம் துவங்குவது குறித்து முறையாக திட்டமிட்டு, டி.ஏ.பி., உட்பட அனைத்து உரங்களையும், இருப்பு வைக்க வேண்டும். இதனால், விவசாயிகள் அலைக்கழிப்பது தவிர்க்கப்படுவதுடன், கூட்டுறவுத்துறைக்கும் வருவாய் கிடைக்கும். மேலும், உரங்கள் இருப்பு குறித்து, வேளாண்துறையின், உழவன் மொபைல் செயலியில், முறையாக 'அப்டேட்' செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X