பொது செய்தி

தமிழ்நாடு

பாலக்காடு எம்.பி., பார்லி.,யில் குரல் நம்ம ஊரு மக்கள் பிரதிநிதிகள் மவுனம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென, பார்லிமென்டில் பாலக்காடு எம்.பி., வலியுறுத்தியுள்ளது, பொள்ளாச்சி மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கி வந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடந்த, 7ம் தேதி முதல் ரயில்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.ஆனால், அதற்கு பிறகும் பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில், பாலக்காடு எம்.பி., ஸ்ரீகண்டன், பொள்ளாச்சி வழித்தடத்தில் திருவனந்தபுரம் - மதுரை இடையே இயங்கி வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.இரு மாநிலங்களுக்கு இடையே பயணிப்போர், பாலக்காடு - பொள்ளாச்சி பகுதிகளுக்கு பணிக்கு சென்று வருவோர் என பல தரப்பினருக்கும் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என, பார்லிமென்டில் வலியுறுத்தி பேசியுள்ளார்.ஆனால், நம்மஊரு மக்கள் பிரதிநிதிகள், மத்திய அரசையும், ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்தவில்லை. இத்தகவல் வெளியானதையடுத்து, பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கிய அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க, பொள்ளாச்சி எம்.பி., மற்றும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, உடுமலை எம்.எல்.ஏ.,க்கள் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X