பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு சாகுபடியை கைவிடும் விவசாயிகள் : நிலையில்லாத விலையால் மாறிய நிலை

Added : செப் 16, 2020
Share
Advertisement
 கரும்பு சாகுபடியை கைவிடும் விவசாயிகள் : நிலையில்லாத விலையால் மாறிய நிலை

உடுமலை:நிலையில்லாத விலை உட்பட காரணங்களால், கரும்பு சாகுபடியை கைவிட்டு, பள்ளபாளையம் விவசாயிகள், மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.உடுமலை பள்ளபாளையம், வடபூதனம் சுற்றுப்பகுதிகளில், கரும்பு சாகுபடி பிரதானமாக இருந்தது. ஏழு குள நேரடிப்பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனத்துக்கு, கரும்பு சாகுபடி செய்து, வெல்லம் தயாரிப்பில், ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.கரும்பு சாகுபடி, வெல்லம் தயாரித்தல் உட்பட பணிகளால், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், கரும்பு, வெல்லத்துக்கு, கடந்த சில ஆண்டுகளாக, நிலையான விலை கிடைப்பதில்லை.ஓணம் சீசனிலும், தேவை குறைந்து, கேரளாவுக்கு போதியளவு வெல்லம் விற்பனைக்கு செல்லவில்லை. இதனால், ஆலை அமைத்து வெல்லம் தயாரித்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.ஓராண்டு, பராமரிக்கும், கரும்பு சாகுபடியில், போதிய விலை கிடைக்காததால், நஷ்டமடைவது, தொடர்கதையானது. பாதிக்கப்பட்டவர்கள் படிப்படியாக மாற்றுச்சாகுபடிக்கு சென்றுள்ளனர். அதன்படி, கரும்பு பிரதானமாக இருந்த பள்ளபாளையத்தில், பரவலாக நடப்பாண்டு, மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டுள்ளது.கரும்பு சாகுபடி பரப்பு குறைவதால், வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்கள், பாகு காய்ச்சுவதற்கான கொப்பரை தயாரிப்பவர்கள், மரத்தால் ஆன அச்சு தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது. கரும்புக்கு ஆதார விலை நிர்ணயித்து, சாகுபடி பரப்பு குறைவதை அரசு தடுத்தால் மட்டுமே நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழப்பதை தவிர்க்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X