முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, கொங்கல்நகரத்தில், தி.மு.க., ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி சார்பில், ஆதவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. முன்னதாக, குடிமங்கலம் ஒன்றிய அவைத்தலைவர் பழனிசாமி தலைமையில், கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.ஒன்றியச்செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஆதரவற்றவர்களுக்கு, அகிலன், அருண்சங்கர், செந்தில்சுரேஷ் உள்ளிட்ட குழுவினர் உணவு வழங்கினர்.ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான கிராமங்களில், தி.மு.க., சார்பில், கட்சிக்கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழாவையொட்டி, 'பறை வாத்தியம்' கலைஞர்களுக்கு உபகரண உதவி வழங்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் முன்னிலை வகித்தார். நகர துணை செயலாளர் நாச்சிமுத்து விழாவுக்கான ஏற்பாடு செய்து இருந்தார்.மாவட்ட மாணவர் அணி சார்பில், அரசு மருத்துவமனை மகப்பேறு விடுதியில் உள்ள மகளிருக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர், நகர பொறுப்பாளர் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.வால்பாறைவால்பாறை அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 112வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், கோவை தெற்கு மாவட்ட பேரவை இணைச்செயலாளர் நரசப்பன், மாவட்ட பாசறை இணைச் செயலாளர் சலாவுதீன் ஆகியோர் வால்பாறை நகரில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.தி.மு.க ., சார்பில் நகர பொறுப்பாளர் பால்பாண்டி, எல்.பி.எப்., தொழிற்சங்க தலைவர் கணேசன், பொதுச்செயலாளர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்தனர்.வாட்டர்பால்ஸ் எஸ்டேட்டில் நடந்த விழாவில், ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமையில், அண்ணாதுரை சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.ம.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க., சார்பில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
- நிருபர் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE