பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சியில் 116 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 16, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், கொரோனா தொற்று பாதித்த, 116 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பொள்ளாச்சி நகரில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகளில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.கடந்த, ஜூலை மாதம் முதல், இதுவரை மொத்தம், 163 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 116 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தனர்; 42 பேர் சிகிச்சையில் உள்ளனர்; ஐந்து பேர் இறந்தனர்.நேற்று 11 பேர்பொள்ளாச்சி மணிமேகலை வீதியில், 42 வயது ஆண், மரப்பேட்டை பள்ளம் பகுதியில், 54 வயதான ஆண், குமரன்நகர் முதல் வீதியில், 80 வயது மூதாட்டி, டி.கோட்டாம்பட்டி ஓம் சாந்தி நகரில், 62வயது முதியவர், மாடர்ன் ரைஸ் மில்ரோட்டில், 37 வயது ஆண், தாளக்கரை பொன்முத்து நகரில், 43 வயது ஆண்; பூசாரிப்பட்டியில், 25 வயது ஆண், சின்னாம்பாளையத்தில், 42 வயது ஆண், ஆனைமலை பெரியபோது கிராமத்தில், 46 வயது ஆண், ஒடையகுளத்தில், 46 வயது பெண், வேடசந்துார் ராம் நகரில், 35 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.பாதிக்கப்பட்டவர்கள், கோவை இ.எஸ்.ஐ., பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X