போலி லாட்டரி விற்பனை 'ஜோர்!' எதற்கும் தடையில்லை!பல மாநிலங்கள் பெயரில் மோசடி

Added : செப் 16, 2020
Share
Advertisement
போலி லாட்டரி விற்பனை 'ஜோர்!' எதற்கும் தடையில்லை!பல மாநிலங்கள் பெயரில் மோசடி

உடுமலை:உடுமலை பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது; ஆசை வார்த்தைகளால், இந்த சூதாட்டத்துக்கு அடிமையாகி தங்கள் வருவாயை இழந்து வருகின்றனர்.தமிழக அரசு, லாட்டரிச்சீட்டால், பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, லாட்டரி விற்பனைக்கு தடை விதித்துள்ளது.ஆனால், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. உடுமலையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் கும்பல், கேரளா, மிசோரம் என பல மாநிலங்களில் வெளியாகும் லாட்டரிகளின் பெயர்களில், தாங்களே அச்சடித்து விற்பனை செய்து வருகின்றனர்.கே.ஏ.,கே.ஆர்., என 20க்கும் மேற்பட்ட சீரியல் எண் வரிசைகளில், லட்சக்கணக்கில் போலி லாட்டரிகள் அச்சடித்து, ஒரு கோடி, 80 லட்சம் என மக்களின் ஆசையை துாண்டும் வகையில், பரிசுத்தொகை நிர்ணயித்து, போலியாக லாட்டரி சீட்டுக்கள் அச்சடித்து வருகின்றனர். நகரப்பகுதி மட்டுமின்றி, கிராமங்களிலும் பல ஏஜன்ட்களை நியமித்து, தினக்கூலி தொழிலாளர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினைரையும் குறி வைத்து வருகின்றனர்.இதற்காக, படித்த இளைஞர்கள் பலரையும் வேலைக்கு வைத்துள்ளனர். 'ஆன்லைன்' மூலம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியிடப்படும், குலுக்கல் முடிவுகள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படுகிறது.அதிலும், குறைந்த தொகைகள் மட்டுமே, வழங்கப்படுகிறது. அதிகப்பட்ச தொகையாக இருந்தால், அவர்களை மிரட்டி அனுப்பி வருகின்றனர்.இதற்காக, இளைஞர்கள் மற்றும் பழைய லாட்டரி வியாபாரிகளை வேலைக்கு அமர்த்தி, வீடு மற்றும் குடோன்களில் இருப்பு வைத்து, லாட்டரி சீட்டுக்களை வழங்கி வருகின்றனர்.அதிக பரிசுத்தொகை என ஆசை வார்த்தை கூறி, தினமும் லட்சக்கணக்கானவர்கள், இந்த போலி லாட்டரி கும்பல்கள் மூலம், ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி, கேரளா மாநிலத்திலிருந்து லாட்டரி சீட்டுக்கள் கடத்தி வந்து, ஒரு சிலர் விற்பனையும் செய்து வருகின்றனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், லாட்டரி மூலம் பல லட்சம் கிடைக்கும், என்ற நம்பிக்கையிலும், தாங்கள் சம்பாதிக்கும் தொகையில், தொழிலாளர்கள், இளைஞர்கள் லாட்டரிகளை வாங்கி ஏமாந்து வருகின்றனர்.அமோகமாக லாட்டரி விற்பனை நடப்பது மற்றும் உடுமலையிலேயே, சட்ட விரோதமாக போலி லாட்டரி அச்சடிப்பு மற்றும் விற்பனை குறித்து போலீசாருக்கு தெரிந்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.உடுமலை பகுதியில், டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி, 24 மணி நேரமும் செயல்படும் மது விற்பனை கடைகள் உட்பட அனைத்து சட்ட விரோத செயல்கள் அரங்கேறும் 'உல்லாசபுரி' யாக மாறியுள்ள நிலையில், போலி லாட்டரிகள் அச்சடித்து, விற்பனை செய்வதும் அமோகமாக நடந்து வருகிறது.போலீஸ் உயர் அதிகாரிகள், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத செயல்கள், போலி லாட்டரி விற்பனை ஆகியவற்றை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X