அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடி பிறந்தநாள் 1,750 மரக்கன்று நட திட்டம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:பிரதமர் நரேந்திர மோடியின், எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று செல்வபுரத்தில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் நடைபெற்ற விழாவில், மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன், இளைஞரணி மாநில செயலாளர் பிரீத்திலட்சுமி, மாவட்ட நிர்வாகி, கருமுத்துதியாகராஜன் மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார், மகளிர் அணி மாவட்ட தலைவி ஜெயதிலகா ஆகியோர், செல்வபுரம் பகுதியில், மரக்கன்றுகளை நட்டனர்.செல்வபுரம், எல்.ஐ.சி., காலனி, முத்துசாமிகாலனி, கல்லாமேடு, சேரன்நகர், முல்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.,வினர் 70 மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து, 70 பெண்களுக்கு சேலை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.கோவை மாநகரப்பகுதியை, 25 மண்டலங்களாக பிரித்து, அதில் தலா ஒரு மண்டலத்துக்கு, 70 மரக்கன்றுகள் வீதம் நடுவதற்கு, கோவை மாநகர பா.ஜ.,திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X