பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை: தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

உடுமலை:குடிமங்கலம் வட்டாரத்தில், காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஊக்கத்தொகை பெற, தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றிய, தோட்டக்கலைத்துறை சார்பில், சில மானியத்திட்டங்கள் அறிவிக்கப்படும்.மானிய விலையில் விதை, இடுபொருட்கள் வினியோகிக்கப்படும். இந்நிலையில், முதன்முறையாக தற்போது, காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறையினர் அறிக்கை: காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், ஏக்கருக்கு, ஆயிரம் ரூபாய் வரை, புதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும். காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், உரிமைச்சான்றிதழ், அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு, சிட்டா, போட்டோ-2, வங்கிக்கணக்கு புத்தக நகல், மற்றும் நாற்றுகள் வாங்கியதற்கான விலைப்பட்டியல் ஆகிய ஆவணங்களோடு விண்ணப்பிக்க வேண்டும்.விவசாயிகளின் வங்கிக்கணக்கில், ஊக்கத்தொகை நேரடியாக அனுப்பப்படும். மேலும், விபரங்களுக்கு, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் - 9486148557, தோட்டக்கலை அலுவலர் - 98650 75473, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் - 88836 10449, 9976267323 என்ற எண்களில், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி, செப். 16-

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ருத்ரலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சந்தன காப்பு அலங்காரத்தில், ருத்ரலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குமரன் நகர் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷக பூஜைகள் நடைபெற்றன. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு, ஆவணி மாதம் முதல் பிரதோஷ பூஜை நேற்று நடந்தது. இதனையடுத்து, மாலை, 5:30 மணிக்கு பால், தயிர், இளநீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேகம் பூஜை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு சிவபெருமானுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X