பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாகனத்தில் சாகச பயணம்: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

Added : செப் 16, 2020
Share
Advertisement
 சரக்கு வாகனத்தில் சாகச பயணம்: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், சரக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து செல்வது தொடர்கதையாகி உள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சியில், போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுவது தொடர்கதையாக உள்ளது. வாகனங்களில், அதிக பாரங்களை ஏற்றி செல்வதுடன், அதனை இறக்க செல்லும் தொழிலாளிகள், லோடு மீது அமர்ந்து ஆபத்தான பயணம் செய்கின்றனர்.இந்நிலையில், சரக்கு வாகனங்களில், ஆட்களை அழைத்து செல்வது தொடர்கதையாக உள்ளது. பஸ் போக்குவரத்து துவங்கினாலும் குறைந்த அளவிலே கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், வெளியூர் செல்பவர்கள், வேலைக்கு செல்வோர் என பலரும் தற்போது சரக்கு வாகனங்களில் பயணிக்கின்றனர்.வாகனங்களில், அதிக ஆட்களை ஏற்றப்படுவதால், நின்று கொண்டு பயணிக்கின்றனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றுவதால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.சிலர் சாகசம் செய்வது போல உட்கார்ந்து செல்வதால், அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் ஒருங்கிணைந்து விதிமுறை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீண் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X