பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வளாகங்களை சீரமைக்க பெற்றோர் அரசுக்கு கோரிக்கை

Added : செப் 16, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை, ஒன்றியத்தில் மழைநீர் தேங்கும் வகையில் பள்ளி வளாகங்களை சீரமைக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் ஆண்டு தோறும் மேற்கொள்ளப் படும்.பள்ளிகளிலும், மின் இணைப்புகளை சரிபார்த்தல், பாசம் படியும் பகுதிகளில் துாய்மைப்பணி, கிணறுகளை மூடி வைத்தல் போன்ற நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன.இருப்பினும், பல பள்ளிகளில், வளாகம் முன், மழைநீர் தேங்குவது தொடர்கிறது. சாக்கடை வசதி மற்றும் வளாகம் மேடாக உள்ள பள்ளிகளில், மழைநீர் வடிந்து விடுகிறது.பல பள்ளிகளில் இவ்வசதிகள் இல்லாததால், நீண்ட நாட்களுக்கு மழைநீர் தேங்கியிருப்பதோடு, குழந்தைகள் வகுப்பறையை விட்டு வெளியே வர முடியாத வகையில், சேறும் சகதியுமாக மாறுகிறது.இதனால், குழந் தைகள் கீழே விழு கின்றனர். தற்போது, பள்ளிகள் செயல்பாடில்லாமல் உள்ளது. ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்குச்சென்று வருகின்றனர்.இருப்பினும், மழை நீர் தேங்குவதால், அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் சேர்த்து, கொசுப்புழு உற்பத்தி அதிகரிக்கும் சூழல் ஏற்படும்.மேலும், குழந்தைகள் இல்லாத இந்த நேரத்தில், பள்ளி வளாகங்களை மழைநீர் தேங்காத வகையில் வடிகால் அமைப்பதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X