அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்புக்கு ரூ.7,168 கோடி துணை முதல்வர் பன்னீர் செல்வம் தகவல்

Added : செப் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 கொரோனா தடுப்புக்கு ரூ.7,168 கோடி துணை முதல்வர் பன்னீர் செல்வம் தகவல்

சென்னை:''கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு, 7,16௭.97 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ''கொரோனாவிற்கு முந்தைய நிதி நிலை அறிக்கையை, மறு பரிசீலனை செய்யவில்லை,'' என்றார்.

அதற்கு பதில் அளித்து, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது:கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட, அனைத்து கூடுதல் செலவினங்களும், துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு சார்பில், 7,167.97 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து, வளர்ச்சியை பெருக்க, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு விரைவில் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும். இந்த இக்கட்டான சூழ்நிலையில், செலவினங்களை மறு சீராய்வு செய்து, அவற்றை வரவினங்களுக்கு ஏற்ப கட்டுப்படுத்துதல், மிகவும் அவசியம்.

எனவே, செலவு குறைப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.பொருளாதாரம் நலிவுற்றிருக்கும் போது, அரசு செலவு செய்யாவிட்டால், வேறு யாராலும் செலவு செய்து, பொருளாதாரத்தை மீண்டு எழச் செய்ய முடியாது. எனவே, மக்கள் நல செலவினங்களை செயல்படுத்துவதில், அரசு உறுதியுடன் உள்ளது.முதல்வர், அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளை, அரசு செயல்படுத்தும். திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Chennai,இந்தியா
16-செப்-202015:13:25 IST Report Abuse
Saravanan மினிமம் 10% கமிஷன் வைத்தால் கூட 700 கோடி அரசியல்வாதிகளுக்கு போயிருக்கும்.
Rate this:
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
16-செப்-202008:36:38 IST Report Abuse
Tamilselvan தினமலர் வாசகர் கருத்து பகுதியில் தவறான தமிழ் வார்த்தியாக்களி திருத்த முடிவதில்லை. சில மாதம் வரை,பொருத்தமான வார்த்தைகள் தினமலரால் பரிந்து உரைக்க படும். ஆங்கிலத்தில் உள்ளது போல ஸ்பெல் செக் வசதி தமிழும் கிடைத்தால் வசதியாக இருக்கும்.அதை செய்யும்படி தினமலரை வேண்டி கொள்கிறோம் . நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X