பொது செய்தி

தமிழ்நாடு

போர்வெல் அமைக்க மானியம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:விளைநிலத்தில், போர்வெல் அமைக்க, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த, சிறு மற்றும் குறு விவசாயிகள், 50 சதவீதம் மானியம் பெறலாம்.பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு, புதிய போர்வெல் அமைக்க, 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை வங்கிக்கடன், அதற்கு, 50 சதவீதம் அரசு மானியமாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, சிறு, குறு விவசாயி சான்று தாசில்தாரிடம் பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி பட்டா, அடங்கல் நகல், ஜாதி, வருமானம், இருப்பிட சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.தகுதியுள்ள விவசாயிகள், கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோார் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.இத்திட்டம் வருமானம் இல்லாத விவசாயிகளுக்கு பயனளிக்கும். அதனால், விண்ணப்பித்து பயனடைய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X