பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் வீடுகளுக்கு நேரடி சேவை இந்தியன் வங்கி விரைவில் அறிமுகம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:''எழுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, வீட்டிற்கே சென்று, சேவை வழங்கும் திட்டம், விரைவில் துவங்கப்பட உள்ளது,'' என, இந்தியன் வங்கி செயல் இயக்குனர், பட்டாச்சார்யா தெரிவித்து உள்ளார்.

இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி, ஏப்., 1 முதல் இணைக்கப்பட்டு, இந்தியன் வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை,அண்ணாசாலை இந்தியன்வங்கி கிளையோடு, அதே சாலையில் உள்ள அலகாபாத் வங்கி கிளை இணைக்கப்பட்டுள்ளது.மேலும், டாக்டர் அழகப்பா சாலையில் உள்ள, இந்தியன் வங்கி கிளையுடன், புரசைவாக்கம், அலகாபாத் வங்கி கிளையும்; நொளம்பூர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையோடு, அதே பகுதி அலகாபாத் வங்கி கிளையும் இணைக்கப்பட்டு உள்ளன.

இணைக்கப்பட்ட, மூன்று இந்தியன் வங்கி கிளைகளையும், அந்த வங்கியின் செயல் இயக்குனர் எம்.கே.பட்டாச்சார்யா, திறந்து வைத்தார். நிகழ்ச்சி யில் அவர் பேசியதாவது: இந்தியன் வங்கியுடன், 6 கிளைகள் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும், 300 கிளைகள் இணைக்கப்பட உள்ளன.

இந்த இணைப்புகள் வாயிலாக, வங்கிகளுக்கு செலவுகள் குறைவதோடு, வாடிக்கையாளர் களுக்கும் சிறப்பான சேவை கிடைக்கும்.மேலும், 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு, அவர்களது வீட்டுக்கே சென்று, வங்கி சேவை வழங்கும் திட்டம், விரைவில் துவங்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X