வழித்தடம் அடைப்பு விவசாயிகள் புகார்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள வீரப்பகவுண்டனுார் முதல் சட்டக்கல் பாறை வழித்தடத்திலுள்ள அடைப்பை அகற்ற கோரி, சப்-கலெக்டரிடம் மக்கள் மனு கொடுத்துள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது:கிணத்துக்கடவு அடுத்துள்ள, சொக்கனுார் ஊராட்சிக்குட்பட்ட வீரப்பகவுண்டனுார் மயானம் முதல், சட்டக்கல்பாறை வரை, ரோட்டில் உள்ள வழித்தடத்தில், 20 விவசாய குடும்பங்கள் உள்ளன.இவ்வழியாக விவசாய விளை பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. ரேஷன் கடைக்கும், மயானத்திற்கும் பல ஆண்டுகளாக சென்று வருகின்றனர்.இந்நிலையில், இவ்வழித்தடத்தை சிலர் வேலி போட்டு அடைத்துள்ளனர். இதனை அகற்றி பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X