பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர் மூலிகை சாகுபடி ரூ.50 லட்சம் அளித்தது அரசு

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:தோட்டக்கலை பண்ணை களில், கபசுர குடிநீர் மூலிகைகள் சாகுபடி செய்வதற்கு, 50 லட்சம் ரூபாயை அரசு வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த, கபசுர குடிநீர் அதிகம் கைகொடுத்து வருகிறது. பசுர குடிநீர் பொடி தயாரிப்பதற்கு ஆடுதொடா, சீந்தில், கற்பூரவல்லி, திப்பிலி, சுக்கு, லவங்கம், வட்டதிருப்பி, சிறுதேக்கு, நிலவேம்பு, கடுக்காய், கோரைக்கிழங்கு, முள்ளி உள்ளிட்ட பலவகை மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுடன், மேலும் சில மூலிகைகள் சேர்க்கப்பட்டு, மூலிகை தேநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது, இந்த மூலிகைகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. சிலர் வேறு சில மூலிகைகளை கலந்து, கபசுர குடிநீர் என்றும், விற்கின்றனர்.எனவே, வரும் நாட்களில் கபசுர குடிநீர் தயாரிப்புக்கு தேவையான தரமான மூலிகைகளை, தோட்டக்கலைத் துறை உற்பத்தி செய்யவுள்ளது. இதற்காக, தோட்டக்கலைத் துறையின், 40 பண்ணைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இங்கு கபசுர குடிநீர் மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கு, 50 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. விரைவில், இந்த மூலிகை களை சாகுபடி செய்வதற்கான பணிகளை துவங்க, மாவட்ட அதிகாரிகளுக்கு, தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன்உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X