தொகுப்பு வீடு பணியில் இழுபறி குடிசையில் பழங்குடிகள் அவதி

Added : செப் 16, 2020
Share
Advertisement

பந்தலுார்:பந்தலுார் அருகே, தேவாலா தேக்கம் பாடி பழங்குடியினர் கிராமத்தில், வீடு கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், ஆபத்தான நிலையில் மக்கள் வசித்து வருகின்றனர்.நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா தேக்கம் பாடி பழங்குடியினர் கிராமத்தில், 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்புகள் பாழடைந்து விழும் நிலையில் இருந்ததால், கடந்த, 2019 ஆம் ஆண்டு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், வீடு கட்டும் பணி ஒப்பந்ததாரர் மூலம் துவக்கப்பட்டது.நான்கு மாதங்களாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இங்குள்ள மக்கள், 'பிளாஸ்டிக்' மற்றும் துணியால் மூடப்பட்ட குடிசைகளில் ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் நாள்தோறும் யானைகள் வரும் நிலையில், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.இந்நிலையில், மிகவும் மோசமான நிலையில் உள்ள குடிசைகளுக்கு, தற்காலிகமாக, கூரை போடும் வகையில், போலீசார் மூலம் உதவி செய்யப்பட்டுள்ளது.பழங்குடிகள் கூறுகையில், 'தொடர் மழை பெய்து வருவதால், எங்களின் குடிசை வீடுகளும் காணாமல் போகும் அபாயம் உள்ளது. எனவே, வீடுகளை விரைவில் கட்டி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X