தமிழ்நாடு

13வது முறையாக ரூ.10 ஆயிரம் மதுரையில் யாசகர் தாராளம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை,: மதுரையில் 13வது முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக யாசகர் பூல்பாண்டியன் 65, கலெக்டர் வினய்யிடம் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார்.துாத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டியன் மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் யாசகம் எடுத்து வருகிறார். யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தில் உணவுசெலவு போக மீதமுள்ள தொகையை பள்ளி,கல்லுாரிகளில் இருக்கைகள், சேர்கள் வாங்க செலவிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கால் மதுரையில் தங்கி விட்டவர், இதுவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 12 முறை ரூ.10 ஆயிரம் வீதம் கடந்த வாரம் வரை ரூ.1.20 லட்சம் வழங்கியிருந்தார். அவரது சேவையை பாராட்டி கலெக்டர் வினய் சுதந்திர தின விழா விருது வழங்கினார்.நேற்று 13வது முறையாக ரூ.10 ஆயிரத்தை பூல்பாண்டியன், கலெக்டரிடம் வழங்கினார். அவர் கூறுகையில், ''நாளிதழ்களில் வெளியான என் செய்தியை கண்டு மக்கள் நான் யாசகம் கேட்கும் போது ரூ.100 மற்றும் அதற்கு மேலும் வழங்குகின்றனர். அதன் மூலம் சேரும் தொகையை தான் நிதியாக வழங்குகிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X