சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி கூக்கல்தொறை மசக்கல் மன்றகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாதவன், 42. மன நோயாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவர், நேற்று முன்தினம் மாலை, அருகில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.பாசிப்படர்ந்த பாறையில் கிணற்றில் இறங்கிய போது, கால் வழுக்கி தவறி விழுந்துள்ளார். கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள் மாதவனை, சடலமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கோத்தகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X