பணியில் இல்லை வேகம்: போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement
 பணியில் இல்லை வேகம்:  போக்குவரத்து பாதிப்பு

பந்தலுார்;பந்தலுார் அருகே, எருமாடு பகுதியில் தண்ணீர் வழிந்தோட முடியாத இடத்தில் கால்வாய் அமைப்பதால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.பந்தலுார் அருகே, எருமாடு பள்ளி சந்திப்பு பகுதியிலிருந்து வெட்டுவாடி செல்லும் சாலை தற்போது ஊராட்சி ஒன்றியம் மூலம் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதில், தண்ணீர் வழிந்து ஓட முடியாத இடங்களில் பணிகள் நடப்பதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், சாலை சேதமடைந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மக்கள் கூறுகையில்,'பணிகளை விரைவாக முடிக்க கூறினாலும், பயனில்லை. நிதியை வீணடிக்காமல், தரமான பணியை செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தி, மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்துள்ளோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X