பொது செய்தி

தமிழ்நாடு

உரிமையியல் நீதிபதி பதவிக்கு தேர்வு அறிவிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:'உரிமையியல் நீதிபதி பதவிக்கு, அக்டோபர், 17, 18ல் முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் வழியே, தமிழக நீதித்துறை பணியில் அடங்கிய, உரிமையியல் நீதிபதி பதவியில், 176 இடங்களுக்கு, முதல் நிலை எழுத்து தேர்வு, 2019 நவம்பர், 24ல் நடந்தது.

இதற்கான முதன்மை எழுத்து தேர்வு, மார்ச், 28, 29ம் தேதிகளில் நடப்பதாக இருந்தது.கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த தேர்வு, அக்., 17, 18ம் தேதிகளில், சென்னையில் அமைக்கப்படும் மையங்களில் மட்டும் நடத்தப்படும்.இதற்கான ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X