பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 437 பேர் 'டிஸ்சார்ஜ்' 19,193 பேர் குணமடைந்தனர்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:கோவையில், ஒரே நாளில் 437 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை, 19 ஆயிரத்து 193 ஆக உயர்ந்தது.கோவை, அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 26 வயது ஆண், 25 வயது பெண், பி.ஆர்.எஸ்., காவலர் குடியிருப்பை சேர்ந்த 36 வயது ஆண் போலீஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டது. காளப்பட்டியில் 15 பேர், பெ.நா.பாளையத்தில் 8 பேர், வெள்ளக்கிணறில் 13 பேர், விளாங்குறிச்சியில் 12 பேர், துடியலுாரில் 10 பேர் என, பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,147 ஆக உயர்ந்தது.கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62, 64 வயது மூதாட்டிகள், 51 வயது பெண், 50 வயது ஆண் ஆகிய நான்கு பேர் நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். மொத்த பலி 361 ஆக உயர்ந்தது.அரசு மருத்துவமனை இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 437 பேர், பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 193 ஆக உயர்ந்தது. தற்போது, 3,593 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X