பொது செய்தி

தமிழ்நாடு

பரிசோதனை முடிவு: உடனடியாக தெரிவிக்க உத்தரவு

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:'தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும்' என, கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார். கோவை கலெக்டர் அலுவலகத்தில், தனியார் ஆய்வகங்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பேசியதாவது: தனியார் ஆய்வகங்கள் பரிசோதனைக்கான மாதிரிகளை பெற்றவுடன், 12 மணி நேரத்திற்குள் முடிவுகளை தெரிவிக்கவேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும். அவர்களின் தொடர்பு, பரிசோதனை விபரங்களை உடனடியாக சுகாதாரத்துறை, கோவை மாநகராட்சிக்கு தெரிவிக்கவேண்டும். ஆய்வகத்தில், பல்ஸ்-ஆக்சிமீட்டரால் பரிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.இவ்வாறு, கூறினார். மாநகராட்சி கமிஷனர் குமரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரைமுருகன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X