பொது செய்தி

தமிழ்நாடு

சூர்யா பின்புலத்தில் யார்?

Added : செப் 16, 2020
Share
Advertisement
 சூர்யா பின்புலத்தில் யார்?

தஞ்சாவூர்:''மத்திய அரசை பற்றி, தொடர்ந்து விமர்சனம் செய்யும் நடிகர் சூர்யாவுக்கு பின்புலமாக தி.மு.க., உள்ளது,'' என, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் இப்ராஹிம் தெரிவித்தார்.

தஞ்சையில் அவர் கூறியதாவது: தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், 'நீட்' தேர்வை பற்றி மக்கள், மாணவர்கள் மத்தியில் பொய் பிரசாரங்களை செய்து வருகின்றன. தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பத்தை வைத்து, மரண வியாபாரம் செய்கின்றனர்.நடிகர் சூர்யா, 'நீட்' தேர்வை பற்றி தவறான கருத்துகளை பரப்பி, மாணவர்களை துாண்டி விட்டுள்ளார். அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு, தி.மு.க., பின்புலமாக இருக்கிறது.

நடிகர்கள் தேசப்பற்று செயலை செய்ய வேண்டுமே தவிர, தேசத்துக்கு எதிராக செயல்பட கூடாது. சூர்யாவும், அவரது குடும்பத்தினரும், தொடர்ந்து மத்திய அரசை கொச்சைப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. அவரது நாடகம், விரைவில் முடிவுக்கு வரும் என்பது உறுதி. இவ்வாறு, அவர் கூறினார்.

சிவகங்கை மாவட்ட, பா.ஜ. வழக்கறிஞர் பிரிவு செயலர் முருகேசன், எஸ்.பி.,யிடம் அளித்த புகார்:'நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால், காணொலிக் காட்சி மூலம் நீதிமன்ற நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை அவமதிக்கும் விதமாக நடிகர் சூர்யா பேசியுள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X