கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இந்தோனேஷியர் வழக்கு தள்ளுபடி

Added : செப் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை:இந்தோனேஷியர்கள் பாஸ்போர்ட் கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த முகமது சோபியல் அர்கம் உட்பட, 12 பேர், சுற்றுலா விசாவில் இந்தியா வந்தனர். விசா நிபந்தனைகள் மற்றும் ஊரடங்கை மீறி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, அதிராமபட்டினம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.பட்டுக்கோட்டை நீதிமன்றம், 'இவர்களுக்கு, 72 நாட்கள் சிறை, அபராதம் விதிக்கப்படுகிறது.

அலைபேசிகள், அடையாள அட்டை, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்களை மேல்முறையீட்டு காலத்திற்கு பின் ஒப்படைக்க வேண்டும்' என உத்தரவிட்டது.இதை எதிர்த்து, முகமது சோபியல் அர்கம் உட்பட, 12 பேர், 'எங்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு செய்தனர்.நீதிபதி, ஆர்.பொங்கியப்பன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16-செப்-202014:53:56 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அருமையான தீர்ப்பு. உயர்நீதி மன்றத்தில் இவர்கள் வழக்காட யார் செலவு செய்கிறார்கள என்பதை விசாரிக்கணுமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X