கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு கொலை வழக்கு : 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement
ஊட்டி:கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, ஊட்டி கோர்ட்டில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில், கோடநாடு கொலை வழக்கு விசாரணை நடக்கிறது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சயான், வாளையார் மனோஜ், மனோஜ் சாமி, உதயகுமார், பிஜின் குட்டி, ஜித்தின் ராய் மற்றும் நிபந்தனை ஜாமினில் உள்ள ஜெம்சீர் அலி என, 7 பேர் நேற்று ஆஜராகினர்.தலைமறைவாக
 கோடநாடு கொலை வழக்கு : 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஊட்டி:கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, ஊட்டி கோர்ட்டில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில், கோடநாடு கொலை வழக்கு விசாரணை நடக்கிறது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சயான், வாளையார் மனோஜ், மனோஜ் சாமி, உதயகுமார், பிஜின் குட்டி, ஜித்தின் ராய் மற்றும் நிபந்தனை ஜாமினில் உள்ள ஜெம்சீர் அலி என, 7 பேர் நேற்று ஆஜராகினர்.தலைமறைவாக இருந்த சந்தோஷ் சாமி நேற்று நீதிபதி வடமலை முன் சரணடைந்தார். வழக்கின் 22வது சாட்சியான லாட்ஜ் உரிமையாளர் சாந்தாவிடம் ஒன்றரை மணி நேரம் விசாரிக்கப்பட்டு, தகவல் பதிவு செய்யப்பட்டது. 24வது சாட்சியான லாட்ஜ் பணியாளர் பிரதீஷ்குமாரிடம் அரை மணி நேரம் விசாரிக்கப்பட்டது.வழக்கில் அரசு வக்கீல் பால நந்தகுமார், எதிர் தரப்பில் வக்கீல் ஆனந்தன் ஆஜராகினர். வழக்கை, 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். குற்றச்சாட்டப்பட்ட, 7 பேர் ஊட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X