பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: தேனி டிஸ்சார்ஜ் 13 ஆயிரத்தை கடந்தது

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை:தேனியில் கொரோனா குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியோரின் எண்ணிக்கை நேற்று 13 ஆயிரத்தை கடந்தது.மதுரை 41மதுரை மாவட்டத்தில் நேற்று 41 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 14,371 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 85 பேர் பாதிக்கப்பட்டனர். இருவர் பலியாகினர். மொத்த பாதிப்பு 15,477 ஆகும். இதுவரை 374 பேர் பலியாகியுள்ளனர்.

திண்டுக்கல் 107

திண்டுக்கல்லில் நேற்று 107 பேர் குணமடைந்தனர். டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7174 ஆக உயர்ந்தது. நேற்று ஒரு எஸ்.ஐ., 3 போலீசார் உட்பட 17 பெண்கள், 11 முதியவர்கள் உட்பட71 பேருக்கு கொரோனா உறுதியானது. மொத்த பாதிப்பு 8001 ஆனது. 676 பேர் சிகிச்சையில் உள்ளனர். வேடசந்தூர் 57 வயது ஆண் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

தேனி 97

தேனி மாவட்டத்தில் நேற்று 97 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகினர். மொத்தம் 13,014 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று புதிதாக 81 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 13,914 ஆக உயர்ந்தது. போடி சுந்தரபாண்டியன் தெரு 57 வயது ஆண் கொரோனாவால் இறந்ததால் பலி 232 ஆக உயர்ந்தது.

ராமநாதபுரம் 3

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். புதிதாக 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 5233 பேர் பாதிக்கப்பட்டதில் 4849 பேர் குணம் அடைந்து உள்ளனர். 270 பேர் சிகிச்சையில் உள்ளனர். 114 பேர் பலியாகியுள்ளனர்.

சிவகங்கை 11

சிவகங்கையில் கொரோனா குணமடைந்த 11 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக 11 பேர் பாதிக்கப்பட்டனர்.

திருநெல்வேலி 77

திருநெல்வேலியில் நேற்று 77 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 10,053 பேர் குணமாகி உள்ளனர். நேற்று 117 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 11,309 ஆனது. தற்போது 1065 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 191 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி 26

தென்காசியில் நேற்று 26 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 5664 பேர் குணமடைந்தனர். நேற்று 56 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6400 ஆனது. தற்போது 615 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேர் இறந்தனர். இதுவரை 121 பேர் இறந்துள்ளனர்.

துாத்துக்குடி 74

துாத்துக்குடியில் நேற்று 74 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 11,620 பேர் குணமாகியுள்ளனர். நேற்று 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிப்பு 12,458 ஆனது. தற்போது 719 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 119 பேர் இறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X