சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி

Added : செப் 16, 2020
Share
Advertisement
 காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி

பெ.நா.பாளையம்;கோவை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலியானார்.கோவை, துடியலுார் அருகே பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் லீலாவதி, 70. நேற்று காலை, 6.00 மணிக்கு தடாகம் ரோட்டில் வரப்பாளையம் பிரிவு அருகே, சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒற்றை யானை, லீலாவதியை துரத்தி தாக்கியது. பலத்த காயமடைந்த லீலாவதி, அதே இடத்தில் உயிரிழந்தார்.காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய வனத்துறையினரை கண்டித்து, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தினர். லீலாவதி உடல், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில்,''கோவை புறநகர் வடக்கு, மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகாலை நேரத்தில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். யானைகள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X