நாகர்கோவில்:உதவி கேட்டு, 'வாட்ஸ் ஆப்'பில் அழுதபடி தகவல் அனுப்பிய மாணவிக்கு, போலீஸ் உதவியால், பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, சில நாட்களாக, உறவினர் ஒருவர், தங்கள் வீடு புகுந்து தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், தங்களுக்கு உதவ யாரும் இல்லை எனவும், 'வாட்ஸ் ஆப்'பில் அழுதபடி உதவி கேட்டிருந்தார்.இந்த ஆடியோ, சென்னை போலீஸ், ஐ.ஜி., அலுவலக அதிகாரிக்கு கிடைத்தது. இது பற்றி விசாரித்து உதவும்படி, குமரி மாவட்ட போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.
மார்த்தாண்டம் போலீசார், இலவுவிளை பகுதியில், கல்லுாரி இரண்டாம் ஆண்டு படிக்கும் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.மாணவியின் தந்தை இறந்து விட்டார். தாயார் சத்துணவு கூடத்தில் வேலை பார்க்கிறார். தங்களது, 12 சென்ட் நிலம் தொடர்பாக, சித்தப்பா மகன் அடிக்கடி வீடு புகுந்து மிரட்டுவதாகவும், யாரும் உதவ முன்வராததால், உதவி கேட்டு, பதிவு போட்டதாகவும் மாணவி கூறினார்.மாணவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. உறவினரிடம், 'இனி தொந்தரவு செய்ய மாட்டேன்' என, போலீசார் எழுதி வாங்கினர். இதனால், பிரச்னை தீர்ந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE