எல்லையில் சிறுத்தைகள் தமிழக மக்கள் அச்சம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எல்லையில் சிறுத்தைகள் தமிழக மக்கள் அச்சம்

Added : செப் 16, 2020
Share
திருப்பத்துார்:உணவுக்காக, ஆந்திராவில் இருந்து வரும் சிறுத்தைகளின் நடமாட்டத்தால், தமிழக எல்லையான ஆம்பூர் அருகே, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கொத்துார் காப்புக்காட்டை ஒட்டி, பாலசுப்பிரமணியன், 56, என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, அவர் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, சிறுத்தை உறுமும் சத்தம்

திருப்பத்துார்:உணவுக்காக, ஆந்திராவில் இருந்து வரும் சிறுத்தைகளின் நடமாட்டத்தால், தமிழக எல்லையான ஆம்பூர் அருகே, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கொத்துார் காப்புக்காட்டை ஒட்டி, பாலசுப்பிரமணியன், 56, என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, அவர் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டுள்ளது.தகவலின்படி, ஆம்பூர் வனத் துறையினர், அவரது நிலத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அங்கு, சிறுத்தையின் கால் தடம் இருந்தது.

விசாரணையில், அருகிலுள்ள ஆந்திரா மாநில வனப்பகுதி எல்லையில், சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது தெரிந்தது.இதையடுத்து, 'பொது மக்கள் யாரும், தனியாக வெளியே செல்ல வேண்டாம்' என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம்பூர் வனத் துறையினர் கூறுகையில், 'ஆந்திரா மாநிலம், சித்துார், பலமனேர் வனப் பகுதியில், நுாற்றுக் கணக்கான சிறுத்தைகள் உள்ளன. அவை, உணவுக்காக அருகிலுள்ள, தமிழக பகுதிக்குள் வருகின்றன. அவற்றை தடுக்க, அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X