பிஞ்சில் பழுத்த சிறுவன் கைது| Dinamalar

'பிஞ்சில் பழுத்த' சிறுவன் கைது

Added : செப் 16, 2020
Share
புதுச்சேரி:எட்டு வயது சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட, 12 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியைச் சேர்ந்த, 8 வயது சிறுவன் ஒருவனிடம், அதே பகுதியைச் சேர்ந்த, 12 வயது சிறுவன், சில நாட்களாக ஓரினச் சேர்க்கை தொந்தரவு செய்து வந்துள்ளான்.இதில் காயமடைந்த சிறுவனை, பெற்றோர், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன், சிறுவனிடம்

புதுச்சேரி:எட்டு வயது சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட, 12 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியைச் சேர்ந்த, 8 வயது சிறுவன் ஒருவனிடம், அதே பகுதியைச் சேர்ந்த, 12 வயது சிறுவன், சில நாட்களாக ஓரினச் சேர்க்கை தொந்தரவு செய்து வந்துள்ளான்.

இதில் காயமடைந்த சிறுவனை, பெற்றோர், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன், சிறுவனிடம் விசாரணை நடத்தினார்.முதலியார்பேட்டை போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர். ௧௨ வயது சிறுவன், அரசியல் பிரமுகரின் மகன் என்பதால், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதையடுத்து, குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன், டி.ஜி.பி.,க்கு புகார் அனுப்பினார். இதன்பின், போலீசார், ௧௨ வயது சிறுவனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X