சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஜய்க்கு எம்.ஜி.ஆர்., முத்தம் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement
 விஜய்க்கு எம்.ஜி.ஆர்., முத்தம் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில், விஜய் ரசிகர்கள் ஒட்டிய அரசியல் போஸ்டரால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில், அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி சுவரில், விஜய் ரசிகர்கள் பெரிய அளவிலான போஸ்டர் ஒட்டியுள்ளனர்.அதில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம், அதன் அருகே, 'புரட்சி தமிழன் தளபதி விஜய்' என குறிப்பிடப்பட்டு, விஜய் படம் அச்சிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., விஜய்க்கு முத்தம் தருவது போன்றும், தலைமைச் செயலகத்தில், கோப்பில் விஜய் கையெழுத்து போடுவது போலவும் அச்சிடப்பட்டுள்ளது.

'இளைஞர்களின் வேலைவாய்ப்பை உயர்த்த, வாழ்வாதாரத்தை காக்க, சட்டசபையில் கையெழுத்திட, மக்கள் தளபதியாக விரைந்து எழுக, நல்லாட்சி தருக புரட்சி தமிழனே' என, போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது.அதோடு, '2021ல் ஒளித்தே - ஒலித்த என்பதையே இப்படி தவறாக அச்சிட்டுள்ளனர் தீரும் எங்கள் சிங்கத்தின் கர்ஜனை, தமிழக சட்டசபையில், தமிழ் இனத்தின் தலைவனாக தலைமை ஏற்க எழுந்து வா தளபதியே' எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம் பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X