கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரம் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை:பழநி மற்றும் கோவிலைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, எத்தகைய நடவடிக்கை மேற்கொள்வது, சிறந்த ஆன்மிக சுற்றுலாத் தலமாக்குவது எப்படி என்பது குறித்து, அரசுத் தரப்பில் ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலைச் சுற்றி, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, ராதாகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். பழநி நகர் மற்றும் கோவிலைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை நிறைவேற்றாததால், திண்டுக்கல் கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க, ராதாகிருஷ்ணன் மீண்டும் மனு செய்தார்.

நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, காணொலியில் விசாரித்தது. திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி, பழநி நகராட்சி கமிஷனர் லட்சுமணன் காணொலியில் ஆஜராகினர்.கோவில் நிர்வாகம் தரப்பில், 'கோவிலுக்குச் சொந்தமான பல இடங்களில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. சில இடங்கள், யாருக்குச் சொந்தமானது என முடிவு செய்ய வேண்டியுள்ளது. 'ஆக்கிரமிப்பு அகற்றும் நோட்டீசை எதிர்த்து, சிலர் அறநிலையத் துறையிடம் மேல்முறையீடு செய்துள்ளனர்' என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் உத்தரவு:இவ்விவகாரத்தில், அரசுத் துறைகளிடம் ஒருங்கிணைப்பு இல்லாதது தெளிவாகிறது. இவ்வழக்கில், வருவாய் நிர்வாக கமிஷனர், நில நிர்வாக கமிஷனர், சர்வே துறை இயக்குனர், நகர் ஊரமைப்புத் துறை இயக்குனர், நகராட்சி நிர்வாக கமிஷனர், சிவகிரி ஊராட்சி நிர்வாகம், எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

இவர்கள் ஒருங்கிணைந்து, பழநி மற்றும் கோவிலைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, எத்தகைய நடவடிக்கை மேற்கொள்வது, மேலும் சிறந்த ஆன்மிக சுற்றுலாத் தலமாக்குவது எப்படி என்பது குறித்து, அக்., 13ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.திண்டுக்கல் கலெக்டர், பழநி நகராட்சி கமிஷனர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X