சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சியில் ரூ. 1.72 கோடி மோசடி

Added : செப் 16, 2020
Share
Advertisement
 பொள்ளாச்சியில் ரூ. 1.72 கோடி மோசடி

ஆனைமலை;பொள்ளாச்சி, கணபதிபாளையம் அருகே விவசாயி இடம், 1.72 கோடி ரூபாய் பெற்று, மோசடி செய்த வழக்கில், கேரளாவை சேர்ந்த, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கணபதிபாளையத்தை சேர்ந்த விவசாயி முத்து, 67. இவர், அதேபகுதியில் தனது தோப்பில், 'ரிசார்ட்' நடத்தி வந்தார். ரிசார்ட்டை விற்பனை செய்த பணத்தில், ஒரு கோடியே, 72 லட்சத்து, 50 ஆயிரத்தை, கேரளாவிலுள்ள தனது வங்கிக்கணக்கில் லாக்கரில் வைப்பதற்காக, தனது நண்பரான ஆலத்துாரை சேர்ந்த அனுாப் குமார், 30, என்பவரிடம் கடந்த, 2ம் தேதி கொடுத்துள்ளார்.பணத்தை பெற்று சென்றவர் தலைமறைவானதால், போலீசில் புகார் கொடுத்தார். வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன், ஆனைமலை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார், தனிப்படை அமைத்து விசாரித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீனாட்சிபுரம் சோதனைச்சாவடி அருகே வழக்கில் தொடர்புடைய, கேரள மாநிலம் ஆலத்துாரை சேர்ந்த சதீஷ், 30, மலப்புரத்தை சேர்ந்த சின்ஜித், 24, எர்ணாகுளத்தை சேர்ந்த மனோஜ், 30, பிலால், 26, மற்றும், காசர்கோடு பகுதியை சேர்ந்த சசிகாந்த், 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து, ஒரு கார், ஐந்து லட்சம் ரூபாய், 'ஏர் பிஸ்டல்' மற்றும், நான்கு கத்திகளை பறிமுதல் செய்தனர். முக்கிய குற்றவாளியான அனுாப் குமாரை தேடி வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'கடந்த, 2ம் தேதி அனுாப் குமார், சதீஸ், சின்ஜித் உடன் சென்று, விவசாயி முத்துவிடம் பணம் பெற்று, கேரளாவில் தலைமறைவானார். கூட்டாளிகளான மனோஜ், பிலால், சசிகாந்த் உடன் சேர்ந்து, ஆறு பேரும் ஆடம்பரமாக பணத்தை செலவு செய்துள்ளனர். ஐந்து பேரும் காரில் மீனாட்சிபுரம் வந்த போது, வாகன சோதனையில் சிக்கினர். அனுாப்குமாரை தேடி வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X