கொடைக்கானல்:கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலாப் பயணியர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 'இ - பாஸ்' இன்றி பஸ்சில் செல்வோரை இறக்கி விடுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு, கடந்த வாரம் முதல், 'இ - பாஸ்' மூலம் சுற்றுலாப் பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.பொதுப் போக்குவரத்து துவங்கிய நிலையில், பஸ்சில் பயணியர் வருகின்றனர்.பஸ்சில் சுற்றுலா வருவோருக்கு, விண்ணப்பிக்க வசதி இல்லாத நிலையில், இ - பாஸ் நிராகரிக்கப்படுகிறது. அதேசமயம், இ - பாஸ் பெறாமல் வருவோர், வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் இறக்கி விடப்படுகின்றனர்.
தொடர்ந்து, இதுபோன்ற நிலை நீடிப்பதால், பஸ்சில் கொடைக்கானல் வரும் பயணியர் அவதிப்படுகின்றனர்.டாக்சி ஓட்டுனர்கள் சங்க செயலர் கணேசன் கூறுகையில், ''பஸ் பயணியரால் தான், எங்களை போன்றோருக்கு வாழ்வு கிடைக்கும். எனவே, பஸ் பயணியருக்கும் விண்ணப்பிக்கும் வசதியை அரசு பரிசீலிக்க வேண்டும்,'' என்றார்.
சப் - கலெக்டர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''கொடைக்கானலுக்கு பஸ்சில் வரும் பயணியர் விண்ணப்பிக்கும் வகையில், வசதி செய்து தரும்படி, அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். இந்நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும்,''என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE