கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' ஊழியர் ஓய்வு வயது

Added : செப் 16, 2020
Share
Advertisement
மதுரை:'டாஸ்மாக் ஊழியர்கள், ஓய்வு வயது சலுகையை, உரிமையாக கோர முடியாது' என, உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, 'டாஸ்மாக்' ஊழியர் விஸ்வநாதன் உட்பட சிலர், 'அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை, 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி, தமிழக அரசு, மே 7ல் அரசாணை பிறப்பித்தது. அதன்படி, எங்களுக்கும் ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்'

மதுரை:'டாஸ்மாக் ஊழியர்கள், ஓய்வு வயது சலுகையை, உரிமையாக கோர முடியாது' என, உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, 'டாஸ்மாக்' ஊழியர் விஸ்வநாதன் உட்பட சிலர், 'அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை, 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி, தமிழக அரசு, மே 7ல் அரசாணை பிறப்பித்தது. அதன்படி, எங்களுக்கும் ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர். நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார்.

அரசுத் தரப்பில், 'அரசாணைப்படி டாஸ்மாக் நிரந்தர ஊழியர்களுக்கு, 59 வயது; ஒப்பந்த, தற்காலிக ஊழியர்களுக்கு, 58 ஆக ஓய்வு வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தற்காலிக ஊழியர்கள்; வயது நீட்டிப்பு சலுகை, அவர்களுக்கு பொருந்தாது' என தெரிவிக்கப் பட்டது. நீதிபதி, '58 வயது பூர்த்தியடையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, தேவைப்படும் பட்சத்தில், ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை வழங்க, அரசு பரிசீலிக்க வேண்டும். 'ஒப்பந்த அல்லது தற்காலிக ஊழியர்கள், ஓய்வு வயது நீட்டிப்பு சலுகையை, உரிமையாக கோர முடியாது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X