பார்லியில் காங்., - பா.ஜ., மோதல்

Updated : செப் 16, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி,: 'நாட்டில், ஆறு விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில், விதிகள் மீறப்பட்டுள்ளன; ஊழல்கள் நடந்து உள்ளன' என, காங்கிரஸ் குற்றம் சாட்டியது.இதை மறுத்த பா.ஜ., 'மோடி அரசில், எந்த நடவடிக்கையும் வெளிப்படையாக நடத்தப்படுகிறது' என, பதில் அளித்துள்ளது.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, 'விமான திருத்த
 
பார்லியில் காங்., - பா.ஜ., மோதல்

புதுடில்லி,: 'நாட்டில், ஆறு விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில், விதிகள் மீறப்பட்டுள்ளன; ஊழல்கள் நடந்து உள்ளன' என, காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இதை மறுத்த பா.ஜ., 'மோடி அரசில், எந்த நடவடிக்கையும் வெளிப்படையாக நடத்தப்படுகிறது' என, பதில் அளித்துள்ளது.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, 'விமான திருத்த மசோதா, 2020' மீதான விவாதத்தை, ராஜ்யசபாவில் துவக்கி வைத்து, காங்கிரஸ் உறுப்பினர்
கே.சி.வேணுகோபால் பேசியதாவது:


latest tamil news





'நிடி ஆயோக்'



வளர்ச்சி என்ற பெயரில், இந்திய விமான நிலையங்களை, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு, ஏகபோக உரிமையாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கிஇருக்கிறது.எதிர்காலத்தில், நாட்டில் விமான நிலையங்கள் அனைத்தும், ஒரு நிறுவனத்துக்கு சொந்தமாகிவிடும். இதை எப்படி அனுமதிக்க முடியும்?விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில், விதிகள் மீறப்பட்டுள்ளன, ஊழல் பெருமளவில் நடந்துள்ளது.
இந்த விவகாரத்தில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சகம், 'நிடி ஆயோக்' ஆகியவை தெரிவித்த பரிந்துரைகளை, அரசு மதிக்கவில்லை. அதனால், ஆறு விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கை பற்றி, தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்கவும், மத்திய அரசு தவறிவிட்டது.


எதிர்ப்பு



விமான நிலைய தனியார்மய நடவடிக்கைகளை, கேரள மற்றும் ராஜஸ்தான் அரசுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.இவ்வாறு, வேணுகோபால் பேசினார். பா.ஜ., உறுப்பினர் நரசிம்ம ராவ் பேசியதாவது:
விமான நிலையங்களை மேம்படுத்துவதிலும், தனியார்மய நடவடிக்கையிலும், மோடி அரசு ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக செயல்படுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில் தான், 2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்கம் ஏலம் விடுவதில் முறைகேடுகள் நடந்து, அதில், உச்ச நீதிமன்றம் தலையிட்டது. மோடி
ஆட்சியில், விமான போக்குவரத்து துறை, பெரும் மாற்றத்தை கண்டு வருகிறது. கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், விமானங்களில் பயணியர் பயணம் செய்வது, 54 சதவீதமாக இருந்தது. இப்போது, 118 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மசோதா மீதான விவாதத்தில், மேலும் சிலர் பங்கேற்று பேசினர். இதன்பின், குரல் ஓட்டு மூலம், மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, லோக்சபாவில், கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
16-செப்-202014:09:05 IST Report Abuse
RajanRajan காங்கிரஸ் எங்கெல்லாம் ஊழல் பண்ணனும்னு கோடு போட்டு காட்டுதோதன்னு நினைக்க தோன்றுகிறது.
Rate this:
Cancel
N S - Nellai,இந்தியா
16-செப்-202006:18:39 IST Report Abuse
N S 'நாட்டில் தனியார் மயமாக்கும் நடவடிக்கையில், விதிகள் மீறப்பட்டுள்ளன ஊழல்கள் நடந்து உள்ளன' ..... காங்கிரஸ் ஆட்சியில நடக்காத ஊழலா. ..... குற்றம் சாட்டியவர்க்கு பணம் பண்ண முடியவில்லையே என்ற ஏக்கம். 'இந்த அரசில் எந்த நடவடிக்கையும் வெளிப்படையாக நடத்தப்படுகிறது' .. இதை நம்பலாம் என்றே தோணுகிறது, ஏனென்றால் நாட்டிற்கே தெரியாமல், சிலர் முன்பு ரஹஸ்ய ஒப்பந்தங்கள் போட்டுள்ளார்கள். ......
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-செப்-202003:58:58 IST Report Abuse
J.V. Iyer எல்லா விமான நிலையங்களுக்கும் நேரு, இந்திரா, ராஜிவ் போன்ற பெயர்களை முதலில் நீக்கவேண்டும். அப்போதுதான் விடிவுகாலம் பிறக்கும். இவ்வளவு காலம் காங்கிரஸ் ஆண்டதன் பலன் இந்த பெயர்கள்தான். இவர்களின் செயல்கள் திராவிட கட்சிகள் போல இல்லை???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X