சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் கைது

Added : செப் 16, 2020
Share
Advertisement

திருச்சி:கருக்கலைப்பு செய்த, போலி பெண் டாக்டரை, திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி, மண்ணச்சநல்லுார் பகுதியில், ராஜலட்சுமி, 42, என்ற பெண், மூன்று ஆண்டுகளாக, கிளினிக் நடத்தி வருகிறார். இங்கு வரும் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதாக, புகார் எழுந்தது.சில நாட்களுக்கு முன், ராஜலட்சுமியிடம் கருக்கலைப்பு செய்த ஒரு பெண்ணுக்கு, உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, கர்ப்பப் பையை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது பற்றி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்ரமணியிடம் புகார் அளித்தார். சுகாதாரத் துறை அதிகாரிகள், நேற்று, கிளினிக்குக்கு சென்று, திடீர் சோதனை நடத்தினர். இதில், 10ம் வகுப்பு மட்டும் படித்துள்ள ராஜலட்சுமி, அலோபதி மருத்துவம் பார்த்ததும், கருக்கலைப்பு செய்ததும் தெரிந்தது. இதையடுத்து, கிளினிக்கை மூடி, 'சீல்' வைத்த அதிகாரிகள், ராஜலட்சுமியை, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவரை, போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X