சம்பளம் வழங்குவதில் குளறுபடி: கல்வித்துறை உத்தரவால் சர்ச்சை

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:அரசாணை வெளியிட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், சில அரசுப்பள்ளிகளில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, வங்கிக் கணக்கில் ஊதியம் வழங்காதது, கல்வித்துறை உத்தரவால் தெரியவந்துள்ளது.ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் மாநிலம் முழுக்க, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் பணிபுரிகின்றனர். வாரத்திற்கு மூன்று அரைநாள் வீதம் பணிபுரியும் இவர்களுக்கு, மாதம் 7,700 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.வங்கி கணக்கு எண்ணில் ஊதியம் வழங்க வேண்டுமென, 2014ல், அரசாணை வெளியிடப்பட்டது.சில அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள், பணமாக ஊதியம் வழங்குவது தெரியவந்துள்ளது. வரும் அக். முதல், வங்கி கணக்கு எண்ணில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை பாயும் என, கல்வித்துறை சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு கலையாசிரியர் நலசங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில்,''சில தலைமையாசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்காக அரசு ஏற்படுத்தியுள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை. மாநிலம் முழுக்க, ஊதியம் வழங்கும் முறை, அரசாணைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை, உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X