சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோடா வியாபாரி கொலை வழக்கு: கைதான 6 பேர் சிறையிலடைப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:'கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயன்றதால், சோடா கடை உரிமையாளரை கொலை செய்தோம்' என, கைதான ஆறு பேர் போலீசாரிடம் தெரிவித்தனர்.கோவை, ஆவாரம்பாளையம் அருகே உள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் பிஜு, 37. ராம்நகரில் சோடா கடை நடத்தி வந்தார். வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்தார். கடந்த 13ம் தேதி பிஜு ஏழு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய ராஜா, கார்த்திக் அருண், அரவிந்த், பிரபு, பிரவீன் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் எங்களது நண்பர். அவருடைய மகன் நிதீஷ்குமாரை, இரு நாட்களுக்கு முன் ராம்நகரை சேர்ந்த விஷ்ணு, 21, ராகுல், 21 ஆகியோர் கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த நிதீஷ்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிஜு காப்பாற்ற முயன்று, சமரச பேச்சில் ஈடுபட்டார். இதனால், பிஜுவை கொலை செய்தோம்' என கூறியுள்ளனர். கொலை வழக்கில் தொடர்புடைய நிதீஷ்குமாரின் தந்தை ஆறுமுகத்தை போலீசார் தேடுகின்றனர். கைதான ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X