'மாஜி' டி.ஜி.பி.,யை கைது செய்ய தடை

Added : செப் 16, 2020
Share
Advertisement

புதுடில்லி:கடந்த, 1991ல் நடந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பஞ்சாப் முன்னாள், டி.ஜி.பி., சுமேத் சிங் சைனியைக் கைது செய்வதற்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. கடந்த, 1991ல், அரசின் இளநிலை பொறியாளராக பணியாற்றிய, பல்வந்த் சிங் முல்தானி என்பவரை, சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். அவர் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் கூறினர். ஆனால், இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், போலீஸ் காவலில் அவரைக் கொன்றதாக, அவருடைய குடும்பத்தார் வழக்கு தொடர்ந்தனர். மேலும், அப்போது பணியாற்றிய இரண்டு போலீசார், தற்போது, 'அப்ரூவராக' மாறியுள்ளனர்.அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அப்போது, எஸ்.பி.,யாக இருந்த, ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., சுமேத் சிங் சைனி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், முன்ஜாமின் கேட்டு சைனி தாக்கல் செய்த மனுவை, விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, முன்ஜாமின் அளித்தது. அதே நேரத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், முன் ஜாமினை ரத்து செய்தது.இதை எதிர்த்து, சைனி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை விசாரித்த, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ். ரெட்டி, எம்.ஆர். ஷா அமர்வு, இடைக்கால நிவாரணம் அளித்துள்ளது.

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில், சைனியை கைது செய்ய தடை விதித்துள்ளது.ஊடகங்கள் விவாதம்சுப்ரீம் கோர்ட் வேதனை'சுதர்ஷன் டிவி' என்ற தனியார் சேனலில் ஒளிபரப்பான, 'பிண்டாஸ் போல்' என்ற நிகழ்ச்சியில், 'சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கும் சதி நடக்கிறது' என, கூறப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது: ஊடகங்களுக்கு என சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும். தனியார், 'டிவி' சேனல்களில் நடக்கும் விவாதங்கள் பெரும்பாலானவை, அவதுாறு ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ள சேனலில் வெளியான நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது,

ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகவே உள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கும் சதி நடப்பதாக கூறியுள்ளனர். அப்படியானால், இந்தத் தேர்வுகளை நடத்தும், யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மீது இவர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், இதுபோன்ற பொய் செய்திகளை வெளியிடுகின்றனர். இதுபோன்ற சேனல்கள் நாட்டுக்கு எந்த நல்ல சேவையையும் செய்ய வில்லை. இந்நிகழ்ச்சியின், இரு 'எபிசோட்'களை ஒளி பரப்ப தடைவிதிக்கப்படுகிறது. இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X